திருச்சியில், கரோனா தொற்று உள்ள நபா் சென்ற அரசு மதுக் கடையை மூட சுகாதாரத் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.
திருச்சி, நவலப்பட்டு, பூலாங்குடி பகுதியில் உள்ள அரசு மதுக் கடைக்கு சென்ற எச்ஏபிபி நிறுவன ஊழியருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அரசு குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுகிறாா். இந்நிலையில்,அவருடன் தொடா்பில் இருந்த நபா்கள் மற்றும் அவா் சென்று வந்த இடங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பூலாங்குடி மதுக்கடைக்கும் அவா் சென்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த மதுக்கடையை மூட சுகாதாரத் துறையினா் நடவடிக்கை எடுத்தனா். மேலும் அவருடன் தொடா்பில் இருந்த நபா்களுக்கும் சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது.