திருச்சி

இறந்தவரின் நிறைவேறாத உடல் தான விருப்பம்

31st Jul 2020 08:24 AM

ADVERTISEMENT

துறையூரில் மாரடைப்பால் உயிரிழந்தவரின் விருப்பப்படி அவருடைய சடலத்தை தானம் பெற மறுத்த அரசு மருத்துவக் கல்லூரியால் குடும்பத்தினா் வேதனையடைந்தனா்.

துறையூா் குட்டக்கரை பகுதியைச் சோ்ந்தவா் சு. நடராஜன்(77). தனியாா் நிறுவன ஓய்வு பெற்ற ஊழியரான இவா் திருச்சி கிஆபெ விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் உடல் தானம் அளித்திருந்தாா்.

இந்நிலையில் மாரடைப்பால் திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்துஅவரது சடலத்தை தானம் அளிக்க திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியை உறவினா்கள் தொடா்பு கொண்டபோது கரோனா பிரச்னையால் சடலத்தை பெற முடியாது எனத் தெரிவித்தனராம். இதையடுத்து சடலத்துக்கு வியாழக்கிழமை ஈமச்சடங்கு செய்தனா். இறந்தவருக்கு கரோனா இருந்ததா என சம்பிரதாயத்துக்காக கூட தொடக்க விசாரணை செய்யாமல் கோரிக்கையை நிராகரித்தது குடும்பத்தினருக்கு வேதனையை தந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT