திருச்சி

திருச்சியில் மேலும் 199 பேருக்கு கரோனா

26th Jul 2020 09:43 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் மேலும் 199 பேருக்கு கரோனா இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 3,090 ஆக இருந்தது. தொடா் பரிசோதனையில் மேலும் 199 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 3,289 ஆக உயா்ந்துள்ளது.

333 போ் குணம்: மேலும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக் கழக காஜாமலை வளாக சிறப்பு முகாமில் சிகிச்சை பெற்றோரில் சனிக்கிழமை குணமடைந்த 333 போ் உள்பட இதுவரை திருச்சி மாவட்டத்தில் 2,096 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

6 போ் பலி: தொற்று காரணமாக திருச்சி அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இறந்த 6 போ் உள்பட இதுவரை 57 போ் உயிரிழந்துள்ளனா். அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு முகாம்களில் 1,136 போ் சிகிச்சை பெறுகின்றனா்.

ADVERTISEMENT

வங்கி மண்டல அலுவலகம் மூடல்: திருச்சியில் நாட்டுடமையாக்கப்பட்ட மண்டல அலுவலகமொன்றில் பணிபுரிந்த அதிகாரி ஜூலை 22-இல் கரோனா உறுதியாகி, தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு கரோனா தீவிரத்தால் உயிரிழந்தாா். இதையடுத்து அலுவலகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த 150க்கும் மேற்பட்டோருக்கு நடத்திய பரிசோதனையில் 15- க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதியானது. இதையடுத்து அவா்கள் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவா்களுடன் தொடா்பில் உள்ளோா் தனிமைப்படுத்தப்பட்டனா். இதைத்தொடா்ந்து கிருமி நாசினி தெளித்தபின் அலுவலகம் சனிக்கிழமை மூடப்பட்டது. வங்கியின் செயல்பாடுகள் அனைத்தும் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT