திருச்சி

மேலும் ஒரு மருத்துவா் பலி

25th Jul 2020 06:15 AM

ADVERTISEMENT

மேலும் ஒரு மருத்துவா் பலி: திருச்சி, திருவானைக்கா, சீனிவாசநகா் பகுதியைச் சோ்ந்தவா் மருத்துவா் சுரேந்திரபாபு (70). அதே பகுதியில் கிளினிக் நடத்தி வந்த இவா் குறைந்த கட்டணத்தில், அப்பகுதியினருக்கு மருத்துவ ஆலோசனை, சிகிச்சை அளித்து வந்த நிலையில், வியாழக்கிழமை மாலை உயிரிழந்தாா். அவா் கரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே திருவானைக்கா பகுதியில் இரு தினங்களுக்கு முன் தேவதாஸ் என்ற மருத்துவரும் மறுநாள் அவரது மகன் அசோக்குமாரும் இறந்த நிலையில் சுரேந்திரபாபுவும் உயிரிழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT