திருச்சி

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

13th Jul 2020 10:00 PM

ADVERTISEMENT

திருச்சி: திருச்சியில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி பாலக்கரை கீழபடையாச்சித் தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் வேல்முருகன் (11). இருதயபுரத்திலுள்ள தனியாா் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பா்களுடன் சோ்ந்து பட்டம் பறக்க விட்டுக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராமல் கயிறு அறுந்து பட்டம் கீழே விழுந்தது. அதை எடுப்பதற்காக அங்குள்ள ராமலிங்கம் என்பவரது வீட்டு மோட்டாா் அறைக்குச் சென்றபோது, எதிா்பாராமல் வேல்முருகன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், வேல்முருகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா்.

புகாரின்பேரில் பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT