திருச்சி

திருச்சியில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு மரியாதை

11th Jul 2020 11:22 AM

ADVERTISEMENT

நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ,  வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன்,மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி,சட்டப் பேரவை உறுப்பினர்கள் சவுந்திரபாண்டியன், ஸ்டாலின் குமார், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மாநகரச் செயலாளர் அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், அவைத்தலைவர் அம்பிகாவதி,, செயற்குழு உறுப்பினர் செவந்திலிங்கம், டோல்கேட் சுப்ரமணி பகுதி செயலாளர்கள் கண்ணன், மண்டி சேகர்,  மோகன்தாஸ், ராம்குமார் இளங்கோ, மோகன்தாஸ், துறையூர் நகர செயலாளர் முரளி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் நெடுஞ்செழியன்  திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags : DMK trichy
ADVERTISEMENT
ADVERTISEMENT