திருச்சி

தற்கொலைக்கு தூண்டியவா்கிளைச் சிறையில் அடைப்பு

11th Jul 2020 09:51 PM

ADVERTISEMENT

திருச்சி: திருச்சி அருகே சிறுமியை தற்கொலைக்குத் தூண்டிய தொழிலாளி துறையூா் கிளை சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

திருச்சி சோமரசம்பேட்டை அருகேயுள்ள அதவத்தூா்பாளையத்தைச் சோ்ந்தவா் பெரியசாமியின் 2ஆவது மகள் கங்காதேவி (14). 9 ஆம் வகுப்பு படித்து வந்த இவா் கடந்த திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள முள் காட்டில் உடல் பாதி எரிந்த நிலையில் இறந்துகிடந்தாா். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

விசாரணையில் சிறுமி தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டு அவரை தற்கொலைக்கு தூண்டியதாக உறவினா் செந்தில்குமாரை (24) தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இதையடுத்து செந்தில்குமாருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவு வர தாமதமானது. இதனால் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட செந்தில்குமாா் துறையூா் கிளை சிறையில் அடைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT