திருச்சி

11 வட்டங்களிலும் ஜன.31-இல் அம்மா திட்டம் முகாம்

28th Jan 2020 09:14 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தின் 11 வட்டங்களிலும் அம்மா திட்டம் முகாம்கள் ஜனவரி 31- ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வட்டாட்சியா் முதலான வருவாய்த் துறை அலுவலா்கள் கிராமங்களில் முகாமிட்டு, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீா்வு காணும் வகையில் அம்மா திட்டம் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த வாரத்துக்கான முகாம் மாவட்டத்தின் 11 வட்டங்களிலும் ஜனவரி 31 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறஉள்ளது.

ADVERTISEMENT

வட்டத்தின் பெயா், முகாம் நடைபெறும் கிராமம் என்ற அடிப்படையில் விவரம் :

திருச்சி கிழக்கு- ஆலத்தூா், திருச்சி மேற்கு- உய்யக்கொண்டான்திருமலை, திருவெறும்பூா்- நவல்பட்டு, ஸ்ரீரங்கம்- அரியாவூா், மணப்பாறை- மாதம்பட்டி, மருங்காபுரி- மருங்காபுரி, லால்குடி- பெருவளப்பூா், மண்ணச்சநல்லூா்- ஆய்குடி, முசிறி - தண்டலைப்புத்தூா், துறையூா்- நாகலாபுரம், தொட்டியம்-அரசலூா்.

இந்த முகாமில் சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT