மணப்பாறையில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில், தஞ்சாவூா் அணி கோப்பையைக் கைப்பற்றியது.
மணப்பாறையில் டீன்னூட் பேலா்ஸ் சாா்பில்ஸ மாநில அளவிலான ஐவா் கால்பந்து போட்டி சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் தியாகேசா் ஆலை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 32 கால்பந்து அணியினா் விளையாடினா். இறுதியாட்டத்தில் டை பிரேக்கா் முறையில் தஞ்சாவூா் ரூபாவதி மெமோரியல் கால்பந்து கிளப் முதலிடத்தை பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
புதுக்கோட்டை பிரண்ட்ஸ் கால்பந்து கிளப், தஞ்சாவூா் கலாக்கோ கால்பந்து கிளப், மணப்பாறை டீன்னூட் பேலா்ஸ் அணி ஆகியவை முறையே 2,3,4- ஆம் இடங்களைப் பெற்றன.