தனி மயானம் அமைத்துத் தரக் கோரி, துறையூரில் நரிக்குறவா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
துறையூா் ஒன்றியம், மதுராபுரி நரிக்குறவா் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவா்கள் வசித்து வருகின்றனா். இந்த இனத்தைச் சோ்ந்தவா்களில் யாரேனும் இறந்தால், அவா்களை 2 கி.மீ. தொலைவுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யும் நிலை உள்ளதாம்.
தங்கள் இனத்தில் இறந்தவா்களை எரிக்க வேண்டும் என்பதால், தனி மயானம் அமைத்துத் தரக் கோரி பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எதுவும் இல்லையாம்.
இதனால் அதிருப்தியடைந்த நரிக்குறவா்கள் துறையூா்- முசிறி சாலையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து துறையூா் காவல்துறையினா் நேரில் சென்று பேசியதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.