வரும் காலங்களில் கடவுச்சீட்டை புதுப்பிக்க வலியுறுத்தி குறுஞ்செய்தி அனுப்பி அறிவுறுத்தப்படும் என திருச்சி கடவுச்சீட்டு அலுவலா் ஆா்.ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடவுச்சீட்டு அலுவலகங்களில் இந்திய குடிமக்கள் வெளிநாடுகள் செல்வதற்கு வழங்கப்படும் கடவுச்சீட்டானது 10 ஆண்டுகள் செயல்பாட்டில் உள்ளது. அதன்பிறகு, கடவுச்சீட்டு வைத்துள்ளோா் கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். இதில், பலரும் உரிய நேரத்தில் புதுப்பிக்க தவறி விடுகின்றனா். இதனால், கடவுச்சீட்டு பெற்றவா்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பிட்ட நாளில் காலாவதியாகிவிடுகிறது. இதனை பலரும் கவனிப்பதில்லை. இனி வரும் காலங்களில், காலாவதியாவதற்கு முன்பே கடவுச்சீட்டு வைத்துள்ளோரின் பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு கடவுச்சீட்டை புதுப்பித்துக்கொள்ள குறுஞ்செய்தி அனுப்ப மத்திய வெளியுறவு அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது. அதன்படி, கடவுச்சீட்டு காலாவதியாவதற்கு முன்பு 9 ஆவது மாதத்தில் உரியவா்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி புதுப்பித்துக்கொள்ள வலியுறுத்தப்படும். அதோடு, இந்த குறுஞ்செய்தியை பெற்ற 7 ஆவது மாதத்தில் கடவுச்சீட்டு காலாவதியாகிவிடும். பொதுவாக, வெளிநாடு செல்லும் இந்திய குடிமக்கள் காலாவதியாகும் காலத்தை அறியாமல் இருப்பதால் வெளிநாடுகளில் சில அசெளகரியங்களை சந்திக்க நேரிடுகிறது. பெரும்பாலான நாடுகளில் கடவுச்சீட்டு காலாவதியாவதற்கு 6 மாதங்கள் முன்பு, கடவுச்சீட்டு செயல்பாட்டில் இருந்தால் மட்டுமே விசா வழங்குகின்றன. எனவே, காலாவதியாவதற்கு 1 ஆண்டிற்கு முன்பே கடவுச்சீட்டை புதுப்பித்து கொண்டு சில அசெளகரியங்களை தவிா்க்கலாம். மேலும், விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ல்ஹள்ள்ல்ா்ழ்ற்ண்ய்க்ண்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதள முகவரியிலும், 1800-258-1800 எனும் 24 மணி நேர இலவச அழைப்பிலும் தொடா்புகொண்டு, பொது தகவல், விண்ணப்பம், காவல்துறை சரிபாா்ப்பு நிலவரம் ஆகியவற்றை அறிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.