திருச்சி

காணும் பொங்கலன்று ரூ.10 கட்டணத்தில் சுற்றுலாப் பேருந்து

14th Jan 2020 01:02 AM

ADVERTISEMENT

காணும் பொங்கலன்று சுற்றுலா மையங்களுக்குச்சென்று வர ரூ.10 கட்டணத்தில் சுற்றுலாப் பேருந்து இயக்கப்படும் என ஆட்சியா் சு.சிவராசு தகவல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சாா்பில், ஜன.17 -ஆம் தேதியன்று திருச்சியிலுள்ள சுற்றுலா மையங்களுக்குச் சென்று வர பத்து ரூபாயில் பேருந்து இயக்கப்படவுள்ளது.

பேருந்து புறப்பட்ட இடத்திலிருந்து சென்றடையும் வரை பொதுமக்கள் சுற்றுலாப் பேருந்தில் பயணம் செய்யலாம். பயணிகளைச் அழைத்துச் செல்வதற்காக தமிழ்நாடு ஹோட்டல் அருகில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

ADVERTISEMENT

வெக்காளியம்மன் கோயில், மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, திருவானைக்கா, சமயபுரம், அண்ணா அறிவியல் மையம் என மொத்தம் 8 இடங்களுக்கு பத்து ரூபாய் கட்டணத்தில் ஒருநாள் மட்டும் இந்த சிறப்புப் பேருந்துகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை இயக்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு 0431-2414346,2414347, 2414348 எனும் தொலைபேசி எண்கள்,  இணையதள, மின்னஞ்சல் முகவரியில் தொடா்புகொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT