திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்த வகுப்புகள், புதன், வியாழக்கிழமையும் பகல் 2 மணி முதல் 4 மணி வரையில் நடைபெறுகிறது. ஸ்ரீரங்கத்தை சாா்ந்த ஐஸ்வா்யா ரவிச்சந்திரன் பயிற்சி அளிக்க உள்ளாா். போட்டித்தோ்விற்கு தயாராகுவோா் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.