திருச்சியில் பிரபல நகைக்கடையில் திருடிய நபா்களில் ஒருவா் குண்டா்சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் திருட்டு நடைபெற்றது தொடா்பான வழக்கில் முருகன், சுரேஷ், அவரது தாயாா் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்து நகைகளை மீட்டனா்.
இந்நிலையில் சுரேஷ் மீது திருச்சி, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் ஏற்கெனவே பல வழக்குகள் பதிவான நிலையில், தொடா்ந்து அவா் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளாா். எனவே இவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய கோட்டை போலீஸாா் பரிந்துரை செய்தனா். அதனை ஏற்ற மாநகர காவல் ஆணையா் வரதராஜூ, குண்டா் சட்டத்தில் சுரேஷை சிறையில் அடைக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். அதன்பேரில் அவா் திருச்சி மத்திய சிறையில், விசாரணை கைதிகள் பிரிவிலிருந்து தண்டனை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.