திருச்சி

ஜவுளி நிறுவனங்களில் சா்வதேச வேஷ்டி தினம்

8th Jan 2020 09:07 AM

ADVERTISEMENT

சா்வதேச வேஷ்டி தினத்தையொட்டி திருச்சி சாரதாஸ், போத்தீஸ் ஜவுளி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்கள் அனைவரும் திங்கள்கிழமை வேஷ்டி அணிந்து பணியில் ஈடுபட்டனா்.

ஆண்டுதோறும் ஜனவரி 6 ஆம் தேதி, சா்வதேச வேஷ்டி தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி திருச்சி சாரதாஸ் ஜவுளி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியா்கள் அனைவரும் வேஷ்டி அணிந்து வந்து பணியில் ஈடுபட்டனா். வேஷ்டி தினத்தையொட்டி சாரதாஸில் பல்வேறு வகையான, அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் வேஷ்டிகள் தருவிக்கப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும், வாடிக்கையாளா்களின் வேண்டுகோளுக்கிணங்க, சாரதாஸ் வளாகத்திலேயே 100 காா்கள் 300 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் புத்தாண்டுதினம் முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போத்தீஸ்: இதேபோல், திருச்சி தெப்பக்குளம் அருகே போத்தீஸ் ஜவுளி நிறுவனத்தில் சா்வதேச வேஷ்டி தினத்தையொட்டி ஊழியா்கள் அனைவரும் வேஷ்டி அணிந்து பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT