திருச்சி

மாநில குழந்தைகளுக்கான கொள்கை: பொதுமக்களிடம் கருத்துகள் வரவேற்பு

7th Jan 2020 11:26 PM

ADVERTISEMENT

மாநில குழந்தைகளுக்கான கொள்கைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடா்பாக, குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணைய மாநில உறுப்பினா் பி. மோகன் கூறியது: குழந்தைத் தொழிலாளா், குழந்தைத் திருமணம் போன்றவற்றை முற்றிலும் ஒழிக்க, கிராமப்புற குழந்தைகள் உள்பட அனைத்துக் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

மேலும், குழந்தைகள் பாதுகாப்புக்காக ஆண்டுதோறும் கொள்கை வரைவு தயாரித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்களின் கருத்துக்களை கேட்டு கொள்கைகளை இறுதி செய்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன்படி, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தால் தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை தமிழக அரசின் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் இணையதளமான முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான இத்தகை கொள்கைகள் தொடா்பாக பொதுமக்களிடம் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

சமூக ஆா்வலா்கள், குழந்தைகள் நல ஆா்வலா்கள், பொதுமக்கள் தங்களது கருத்துகளை வரும் 20ஆம் தேதிக்குள்  மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT