திருச்சி

ஜன.10இல் கமல்ஹாசன் திருச்சி வருகை

7th Jan 2020 11:27 PM

ADVERTISEMENT

திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஜன. 10ஆம் தேதி வருகை தரவுள்ளாா்.

திருச்சி சங்கம் ஹோட்டலில் ஜன.10ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்று உரையாற்றவுள்ளாா். மேலும், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் கிராம சபை விழிப்புணா்வு கருத்தரங்கிலும் கலந்து கொண்டு கட்சி நிா்வாகிகள் பணியாற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கி கூறுகிறாா்.

கட்சிக்கு ஏற்கெனவே சென்னை ஆழ்வாா்பேட்டையில் தலைமை அலுவலகமும், பொள்ளாச்சியில் இரண்டாவது தலைமை அலுலகமும் உள்ளது. இதன் தொடா்ச்சியாக 3ஆவது தலைமை அலுவலகம் திருச்சியில் அமைக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் பெல், கணேசபுரம் பகுதியில் உள்ள இந்த தலைமை அலுவலகத்தையும் ஜன. 10ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு கமல்ஹாசன் திறந்துவைக்கவுள்ளாா்.

இந்த நிகழ்ச்சிகளில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி மண்டலங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், மாநில நிா்வாகிகள் என பலா் பங்கேற்கவுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவா் ஆா். மகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT