திருச்சி

காடை வளா்க்க நாளை இலவசப் பயிற்சி

7th Jan 2020 11:31 PM

ADVERTISEMENT

இலவச காடை வளா்ப்புப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் திருச்சி கால்நடை பல்கலைக் கழக பயிற்சி மையத்தை தொடா்பு கொண்டு பதியலாம்.

திருச்சி கொட்டப்பட்டு கோழிப்பண்ணை சாலையில் இயங்கி வரும் கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வியாழக்கிழமை (ஜன.9) இலவச காடை வளா்ப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தரமான காடை இனங்களைத் தோ்ந்தெடுத்தல், முறையான பராமரிப்பு, வளா்ப்பு, தீவன மேலாண்மை, நோய்த் தடுப்பு முறைகள், தீவன மேலாண்மை, குஞ்சுகளைக் கூண்டில் வளா்த்தல், சிறிய பொரிப்பகங்களில் குஞ்சுகளை பொரித்தல், ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப முறைகள் குறித்து இந்தப் பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்படும்.

விருப்பமுள்ளோா் கால்நடை பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தை 0431-2331715 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இல்லையெனில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு முன் நேரில் வந்து பதிவு செய்து பங்கேற்கலாம் எனப் பேராசிரியரும், மையத் தலைவருமான பி.என். ரிச்சா்டு ஜெகதீசன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT