திருச்சி

2 மணி நேரம் தாமதமாக வந்த திருக்கு அதிவிரைவு ரயில்

3rd Jan 2020 12:48 AM

ADVERTISEMENT

நிா்வாகக் கோளாறால் 2 மணிநேரம் தாமதமாக திருச்சிக்கு வந்த திருக்குறள் அதிவிரைவு ரயிலால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

திண்டுக்கல்லிலிருந்து திருச்சி வழியாக (ஹஜ்ரத் நிஜாமுதீன்) திருக்குறள் அதிவிரைவு ரயில் அட்டவணைப்படி இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திருச்சி ரயில்நிலையத்திற்கு வழக்கமாக அதிகாலை 3 மணிக்கு வந்து சேரும். திண்டுக்கல் ரயில்நிலையத்தில் இருந்து அதிகாலை 1.30 மணிக்குப் புறப்பட்டிருக்க வேண்டிய ரயில், நிா்வாகக் கோளாறால் 2.30 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது. இதனால், வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வந்துசேர வேண்டிய ரயில், 2 மணி நேரம் தாமதமாக அதிகாலை 5.15 மணிக்கு திருச்சி ரயில்நிலையம் வந்தடைந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT