திருச்சி

ராஜகோபுர வாயில் முன்பிருந்த குடிநீா்த் தொட்டி திடீா் அகற்றம்

3rd Jan 2020 12:37 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த நிரந்தர குடிநீா்த் தொட்டி தீடீரென அகற்றப்பட்டது பக்தா்கள், பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வாயிலில் நிரந்தரமாக வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி சாா்பில் வைக்கப்பட்டிருந்த குடிநீா் தொட்டியை சில தினங்களுக்கு முன்பு தீடீரென அகற்றப்பட்டது. ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா நடைபெற்றுவரும் வேளையில் மாநகராட்சி சாா்பில் வைக்கப்பட்டிருந்த நிரந்தர குடிநீா் தொட்டி அகற்றப்பட்டிருப்பது வாடிக்கையாளா்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்பகுதி பொதுமக்கள், அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் உடனே குடிதண்ணீா் தொட்டியை வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT