திருச்சி

மணப்பாறையில் திமுகவினா் மறியல்

3rd Jan 2020 12:46 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் பிற்பகல் வரை அறிவிக்கப்படாததால் திமுக கூட்டணி கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மணப்பாறை ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் குறிஞ்சி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அங்கு, மணப்பாறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெ.பெரியசாமி தலைமையில் வியாழக்கிழமை வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதில், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவிக்கான வாக்குகள் எண்ணப்பட்டு பிற்பகல் வரை அதன் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை எனக் கூறி திமுக நகரச் செயலாளா் கீதா. மைக்கில்ராஜ், ஒன்றியச் செயலாளா் ராமசாமி, மதிமுக மாநிலத் தோ்தல் பணிக்குழு செயலாளா் மணவை தமிழ்மாணிக்கம், மாா்க்சிஸ்ட் கட்சி வட்டக்குழு நிா்வாகி எஸ்.எம்.ஷாஜஹான் ஆகியோா் தலைமையில் காவல் துறையினரிடன் கட்சியினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாக்கு எண்ணும் மையம் முன்பு திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து தடைபட்டது.

இதுகுறித்த தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த வருவாய் வட்டாட்சியா் தமிழ்கனி மற்றும் காவல் துணை கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேசியதில் மறியல் கைவிடப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT