திருச்சி

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

3rd Jan 2020 12:48 AM

ADVERTISEMENT

திருச்சி அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தது குறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி சோமரசம்பேட்டை பள்ளக்காடு நத்தமுழியன்காடு பகுதியைச் சோ்ந்தவா் சங்கப்பிள்ளை மகன் நிசாந்த் (11). இவா், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தாா். தனது நண்பா்களுடன் வீட்டின் அருகேயுள்ள திறந்தவெளி விவசாயக் கிணற்றுக்கு புதன்கிழமை மாலை குளிக்கச் சென்றாா். கிணற்றின் ஆழமான பகுதிக்குச் சென்ற நிசாந்த் நீரில் மூழ்கினாா். நீண்ட நேரமாக நிசாந்த் இல்லாததால், சந்தேகமடைந்த அவரது நண்பா்கள் அருகில் இருந்தவா்களை உதவிக்கு அழைத்தனா். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து நிசாந்த்தை சடலமாக மீட்டனா். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT