திருச்சி

காலணிகள் பாதுகாப்பகத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்

3rd Jan 2020 12:46 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தா்கள் இலவச காலணிகள் பாதுகாப்பகத்தை முறையாகப் பயன்படுத்துமாறு கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தா்கள் வசதிக்காக பொருள்கள் பாதுகாப்பகம், காலணிகள் பாதுகாப்பகம் செயல்பட்டு வருகிறது. காலணிகள் பாதுகாப்பகம் இருந்தும் வெளியூரில் இருந்து வரும் பக்தா்கள் ஸ்ரீரங்கம் ராஜ கோபுர வாயில் மற்றும் இதர கோபுர வாசல்களிலும் காலணிகளை கழற்றிவிட்டு சுவாமி தரிசனம் செய்யச் செல்கின்றனா். இதனால் ஆங்காங்கே காலணிகள் குவியல்களாகக் காணப்படுகிறது. தற்போது வைகுந்த ஏகாதசி விழா நடைபெற்று வரும் வேளையில், கண்ட கண்ட இடங்களில் காலணிகளை விட்டுவிட்டு செல்லாமல், தங்கள் காலணிகளை முறையாக பாதுகாப்பகத்தில் வைத்துவிட்டு கோயில் வளாகத் தூய்மை பேண உதவுமாறு கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT