துறையூா் ஆத்தூா் சாலையில் உள்ள ஸ்ரீ நந்திகேசுவரா், காசி விசுவநாதா், கங்காரம்மன், காமாட்சியம்மன், திருச்சி சாலை ஆஞ்சநேயா் மற்றும் பெருமாள்மலையில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி ஆகிய கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. சுவாமிகளுக்கு புது வஸ்த்ரம் சாத்தி மலா் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.