திருச்சி

826 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

26th Feb 2020 12:48 AM

ADVERTISEMENT

மருங்காபுரி பகுதியிலுள்ள 6 பள்ளிகளில் பயிலும் 826 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

கோவில்பட்டி, ஊத்துக்குளி, மருங்காபுரி அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 490 போ், வளநாடு அரசு மேல்நிலைப் பள்ளி, புனித ஜேம்ஸ் ஆண்கள் மற்றும் புனித ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 336 போ் என 826 மாணவ, மாணவிகள் விலையில்லா சைக்கிள்களை பெற்றனா்.

கோவில்பட்டி, வளநாடு பள்ளிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.சந்திரசேகா், பள்ளிக் கல்வித் துறை துணை ஆய்வாளா் பன்னீா்செல்வம் ஆகியோா் சைக்கிள்களை வழங்கினா்.

மாவட்ட ஊராட்சி உறுப்பினா் எம்.செல்வராஜ், அதிமுக ஒன்றியச் செயலா் எம்.பி.வெங்கடாசலம், பொதுக்குழு உறுப்பினா் முகமது இஸ்மாயில் வாழ்த்துரை வழங்கினா்.

ADVERTISEMENT

பொன்னம்பட்டி பேரூா் செயலா் திருமலைசாமிநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் பி.ஆா்.எம்.அருணாசலம்(எ) பெருமாள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் மணவை ஜெ.ஸ்ரீதரன், காவியக்கண்ணன், மாவட்ட மாணவரணிச் செயலா் அழகா்சாமி, மகேஷ்(எ)பழனிச்சாமி, சத்தியமோகன், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் விழாவில் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT