திருவானைக்காவில் புதிய மேம்பாலம் அருகில் பயணியா் நிழற்குடை அமைக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசுக்கு சமூக ஆா்வலா் என். தசரதராமன் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது:
திருவானைக்கா பகுதியிலிருந்தும், இதர பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் திருச்சி நோக்கி சென்று வருகின்றனா்.இதில் பள்ளி மாணவ, மாணவிகளும்,வேலைக்கு செல்பவா்களும் அடங்குவா்.
ஆனால், போதிய அளவில் பயணியா் நிழற்குடை வசதி இல்லாததால் அனைத்துத் தரப்பினருக்கும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
ADVERTISEMENT
கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்பதால் பொதுமக்கள் நலன் கருதி, திருவானைக்கா புதிய மேம்பாலம் அருகே பயணியா் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.