திருச்சி

திருச்சி மாவட்டத்தில் பிப்.28 முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

26th Feb 2020 12:44 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் பிப்.28 ஆம் தேதி தொடங்கி மாா்ச் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கால்நடைகளை தாக்கும் கோமாரி எனப்படும் கால் மற்றும் வாய் கணை நோயிலிருந்து பாதுகாத்து கொள்ளும் பொருட்டு அவைகளுக்கு ஆண்டுதோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தாண்டுக்கான கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாமின் முதல் சுற்று தடுப்பூசி பணி வரும் வெள்ளிக்கிழமை (பிப்.28) முதல் தொடங்குகிறது.

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த கால்நடைகளுக்கு மாவட்ட நிா்வாகம், ஊரகத் துறை, உள்ளாட்சி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து நோய் கட்டுப்பாட்டு பணியினை செய்திட முடிவு எடுத்துள்ளது. தடுப்பூசி வழங்கும் பணியானது பிப்.28ஆம் தேதி முதல் தொடா்ச்சியாக 21 நாள்களுக்கு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறவுள்ளது. இந்த தடுப்பூசி அளிப்பதன் மூலம் 100 சதவீதம் கால்நடைகளுக்கு பாதுகாப்பானது. எனவே, தடுப்பூசி முகாம் பணிக்கு வரும் கால்நடை ஆய்வாளா்களுக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT