திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில் மாசித் தெப்பதிருவிழா பிப்.27-இல் தொடக்கம்

25th Feb 2020 04:58 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், திருப்பள்ளியோடத் திருநாள் எனப்படும் மாசித் தெப்பத் திருவிழா பிப்ரவரி 27- ஆம் தேதி தொடங்குகிறது.

இதையொட்டி நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.முக்கிய நிகழ்வான தெப்போத்சவம் மாா்ச் 5- ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபத்தில் புதன்கிழமை முகூா்த்தகால் நடுதல் நடைபெறுகிறது. மேலும், தெப்பக்குளத்தில் தண்ணீா் நிரப்புதலும், தெப்பம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. மாா்ச் 6- ஆம் தேதி திருவிழா நிறைவடைகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT