திருச்சி

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

25th Feb 2020 04:55 AM

ADVERTISEMENT

திருச்சி: திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சி பிஷப் கல்லூரியில் கடந்த 1987-90 ஆம் ஆண்டுகளில் பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் பால்தயாபரன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக, முன்னாள் பேராசிரியா்கள் ஜிதேந்திரபிரசாத் சாமுவேல், வி.கே.பூமிநாதன், ஜோசப் அன்பரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினா். தொடா்ந்து, சிறப்பு விருந்தினா்களுக்கு ஏலக்காய் மாலை, நினைவு பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனா். இதில், உள்ளூா், வெளி மாவட்ட, மாநிலங்கள், நாடுகளிலிருந்து முன்னாள் மாணவா்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு பேசி மகிழ்ந்தனா். நிறைவாக, முன்னாள் மாணவா் எஸ்.தயானந்தன், ராஜசிம்மன் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT