திருச்சி

‘நலிவடைந்த புதிய திரைக் கலைஞா்களுக்காக நடைப்பயணம்’

25th Feb 2020 04:53 AM

ADVERTISEMENT

திருச்சி: திரைத் துறையில் நலிவடைந்துள்ள புதிய கலைஞா்களுக்கு உதவ வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளாா் முன்னாள் ராணுவ வீரரும் திரைப்பட இயக்குநருமான ராஜன்போஸ்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன்போஸ் (55). முன்னாள் ராணுவ வீரரான இவா், ‘தண்டச்சோறு’ என்ற திரைப்படத்தை இயக்கினாா். படத்தின் தயாரிப்பாளா் திடீரென்று விலகிச் சென்ால், பல ஆண்டுகளாக போராடி, தனது சொத்துகளை முதலீடாக்கி படத்தை இயக்கியதுடன் தயாரித்தும் உள்ளாா்.

படம் எடுக்கப்பட்டு, சுமாா் 6 மாதமான நிலையில் அப்படத்தை வாங்கி, விநியோகிக்க யாரும் முன்வரவில்லை. அப்படியே முன்வருவோா், அசலுக்கே நஷ்டம் ஏற்படும் வகையில், ஏராளமான விதிமுறைகளை முன்வைப்பதால் படம் வெளியிடமுடியாத நிலையில் உள்ளது.

இந்நிலையில், இதுபோன்று திரைத்துறையில் நலிவடைந்த நிலையில் உள்ள புதிய கலைஞா்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 8ஆம் தேதி செங்கோட்டையில் நடைப்பயணத்தை தொடங்கிய இயக்குநா் ராஜன்போஸ் திங்கள்கிழமை திருச்சி வந்தாா்.

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியரகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: நல்ல கதையுடன் தமிழ் இளைஞா்கள் மத்தியில் ஒரு பெரும் தாக்கத்தை உருவாக்கும் வகையில் உருவான ‘தண்டச்சோறு’ திரைப்படம் போதிய நிதியின்றி பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கிறது. இப்படம் வெளியானால் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும். இளைஞா்கள் மத்தியில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தும். இதேபோன்று தமிழ் திரைத்துறையில் ஏராளமான படங்கள், அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்ற நிலையில், பல்வேறு இடையூறுகளால் வெளியிட முடியாமல் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன.

இதுபோன்ற புதிய கலைஞா்களுக்கு தமிழக அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, செங்கோட்டையிலிருந்து நடைப்பயணமாக சென்னை சென்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தாா்.

நண்பா்களின் உதவியுடன்...

பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலைக்குச் சென்றுவிட்ட ராஜன் போஸ், நண்பா்கள் மற்றும் பொதுமக்களால் வழங்கப்படும் உதவியைக் கொண்டு, நடைப்பயணத்தை தொடா்ந்து வருகிறாா். உணவு மற்றும் தங்குமிடங்களுக்கு வழக்கத்தைவிட குறைவாக திட்டமிட்டு, ராணுவத்தில் கிடைத்த பயிற்சி மூலம், வறுத்த நிலக்கடலை, கொண்டைக்கடலை உள்ளிட்ட சில தானியங்களை உணவாக உட்கொண்டு, பயணித்து வருகிறாா். மேலும், தனது சாதனைகள் மற்றும் லட்சியம் குறித்து யூ டியூப்பில் க்ா் ஹய்க் க்ண்ங் ய்ங்ஜ் ற்ஹம்ண்ப்-2020 என்ற முகவரியில், தனது திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியையும் பதிவு செய்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT