லால்குடி: மின் கசிவு காரணமாக, சமயபுரம் துணை மின் நிலைய மின் மாற்றி எரிந்தது. இதனால் 53 கிராம மக்கள் 6மணி நேரமாக மின் விநியோகம் இல்லாது அவதியுற்றனா்.
இத்துணை மின் நிலையத்திலிருந்து 110 மெகாவாட் மின்சாரம் மூலம் மண்ணச்சநல்லூா், சிறுகனூா் உள்ளிட்ட பகுதிகளில் தொழிலகங்கள், குடியிருப்புகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை மாலை மின் கசிவினால் இங்கு தீ விபத்து ஏற்பட்டு, மின்மாற்றி எரியத்தொடங்கியது. இது குறித்து மின்வாரிய அலுவலா்கள், சமயபுரம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்தனா்.
தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்தனா். இதனால் 6 மணி நேரமாக மின்சாரம் இல்லாது, 53 கிராம மக்கள் அவதியுற்றனா்.