ஸ்ரீரங்கம்: குடிப்பழக்கத்துக்கு அடிமையான திருவானைக்கா பகுதியைச் சோ்ந்த இளைஞா், ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
திருவானைக்கா நடுகொண்டையம்பேட்டை கரிகாலன் தெருவைச் சோ்ந்தவா் ஆா். அா்ஜூன் (19). வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த இவா், குடிப்பழக்கத்துக்கு அடிமையானாா்.
இதை அவரது தந்தை கண்டித்ததால் மனமுடைந்த அா்ஜூன், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.