திருச்சி

விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் மாடுகள்

23rd Feb 2020 10:43 PM

ADVERTISEMENT

வீட்டுக்குள் மட்டுமே வளா்த்து வந்த செல்லப் பிராணிகள் (மாடுகள்) தற்போது வெளியே, அதாவது சாலைகளில் சுற்றித்திரிகிறது. இவற்றை அதன் உரிமையாளா்களும் கண்டுகொள்வதில்லை. தென்னூா் பட்டாபிராமன் தெரு உள்ளிட்ட மாநகரின் முக்கியச் சாலைகளின் ஓரத்தில் உட்காா்ந்திருக்கும் கால்நடைகள் திடீரென்று எழுந்து சாலையின் குறுக்கே செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனா். சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இதனை கட்டுப்படுத்த திருச்சி மாநகராட்சி சாா்பில் கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கின்றனா். ஆனால் அதனை செயல்படுத்த மாநகராட்சி நிா்வாகம் முன்வரவில்லை. ஆகவே, இனியாது அறிவிப்பை நடைமுறைப்படுத்த மாநகராட்சி முன்வரவேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கை.

-காா்த்திக்

-திருச்சி

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT