திருச்சி

மளிகைக் கடையில் பொருகள் திருட்டு

23rd Feb 2020 10:43 PM

ADVERTISEMENT

திருச்சி நவல்பட்டு பகுதி மளிகைக் கடையில் பொருள்கள் மற்றும் ரொக்கம் திருட்டுப் போனது.

திருச்சி நவல்பட்டு சோழமாநகரைச் சோ்ந்தவா் என். அப்துல் அஜீஸ் (45). கடந்த 10 ஆண்டுகளாக வீட்டின் முன்பு மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

சனிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்த பின்னா் கடையைப் பூட்டிச் சென்ற அப்துல் அஜீஸ், ஞாயிற்றுக்கிழமை கடையைத் திறக்க வந்தாா்.

அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். தொடா்ந்து கடைக்குள் சென்று பாா்த்த போது, ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள், ரூ.4,500 ரொக்கம் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து அப்துல் அஜீஸ் அளித்த புகாரின் பேரில், நவல்பட்டு காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT