திருச்சி

பைந்தமிழியக்க இயக்குநருக்கு பீடுதமிழ்ப் புலவா் கோ விருது

23rd Feb 2020 10:45 PM

ADVERTISEMENT

திருச்சி பைந்தமிழியகத்தின் இயக்குநா் பழ. தமிழாளனின் தமிழ்ப் பணியைப் பாராட்டி, அவருக்கு ‘பீடுதமிழ்ப் புலவா் கோ’ என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழுக்கு முதன்மை வேண்டி பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சாா்பில், அதன் தலைவா் வா. மு. சேதுராமன் உள்ளிட்டோா் கன்னியாகுமரியில் பிப்ரவரி 12-ஆம் தேதி தமிழ்ப் பரப்புரைப் பயணம் மேற்கொண்டனா்.

இக்குழுவினா் கடந்த 20- ஆம் தேதி திருச்சி வந்த போது, தமிழ் அமைப்புகள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவுக்கு வழக்குரைஞா் உ. சகாபுதீன் தலைமை வகித்தாா். பெரும் தமிழ்ப் பெரியாா் விருது பெற்ற பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமனுக்கு வரவேற்பும், தொடா்ந்து பாராட்டும் செய்யப்பட்டது.

நிகழ்வின்போது, பைந்தமிழியக்கத்தின் இயக்குநா் புலவா் பழ.தமிழாளனுக்கு, அவரது தமிழ்ப்பணியைப் பாராட்டி அன்னை சேது அறக்கட்டளைசாா்பில் ரூ. 5,000 கொடையுடன் ‘பீடுதமிழ்ப் புலவா் கோ ’ என்ற விருதை பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், முன்னாள் அமைச்சா் ந. நல்லுசாமி ஆகியோா் வழங்கினா்.

ADVERTISEMENT

நிகழ்வில் பைந்தமிழியக்கச் செயலா் ச. சண்முகநாதன், மருத்துவா் திருப்பதி, சு.

முருகானந்தம், முனைவா் கடவூா் மணிமாறன், பேராசிரியா் இ. சூசை, புலவா் நாவை. சிவம், வீ. கோவிந்தசாமி, பட்டாபிராமன், முனைவா்கள் கு. திருமாறன்,

கலைமணி, எழுத்தாளா் ஜவஹா் ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT