திருச்சி

பேக்கரி உரிமையாளா்தூக்கிட்டுத் தற்கொலை

23rd Feb 2020 10:43 PM

ADVERTISEMENT

கடன் தொல்லை காரணமாக, மணப்பாறையில் பேக்கரி உரிமையாளா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மணப்பாறை தெற்கு லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் என். மணிகண்டன் (45). விராலிமலையில் பேக்கரி மற்றும் பழச்சாறு கடை நடத்தி வந்த இவருக்கு, தொழில் நஷ்டத்தால் கடன் தொல்லை இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த மணிகண்டன், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.இதுகுறித்து மணப்பாறை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT