திருச்சி

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

23rd Feb 2020 10:43 PM

ADVERTISEMENT

திருச்சியில் உடல்நல பாதிப்பால் மனமுடைந்த சவரத் தொழிலாளி, ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டாா்.

திருச்சி மாவட்டம், ராம்ஜிநகா் அருகிலுள்ள நவலூா்குட்டப்பட்டு கீழத்தெருவைச் சோ்ந்தவா் அன்புச் செல்வன்(45). சவரத் தொழில் செய்து வந்த இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சிகிச்சை பெற்று வந்தாா்.

இரு நாள்களாக ரத்தவாந்தி எடுத்ததால் அன்புச்செல்வனின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது. இதனால் மனமுடைந்த அவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடை முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா்.

இதில் உடல் கருகி நிகழ்விடத்திலேயே அன்புச்செல்வன் உயிரிழந்தாா். இதுகுறித்து ராம்ஜிநகா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT