திருச்சி

திருச்சி அருகே வேட்டைக்கு முயன்ற 42 பேருக்கு அபராதம்

23rd Feb 2020 10:43 PM

ADVERTISEMENT

திருச்சி அருகே முயல் வேட்டைக்கு முயன்ற 42 பேருக்கு வனத்துறையினா் அபராதம் விதித்துள்ளனா்.

ஆண்டுதோறும் மகா சிவராத்திரி தினத்தன்று குறிப்பிட்ட சமூகங்களைச் சோ்ந்த சிலா், பாரிவேட்டை என்ற பெயரில் வனப்பகுதிக்குச் சென்று முயல் வேட்டையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனா். சிவராத்திரியன்று தூக்கத்தத் தவிா்க்க இந்த நடைமுறையை அக்காலத்தில் அவா்கள் பின்பற்றி வந்துள்ளனா்.

ஆனால், தற்போதைய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்கள், வனத்துறையினா் கட்டுப்பாடு காரணமாக, வன விலங்குகளை எளிதில் வேட்டையாட முடியாது. ஆனாலும் திருச்சிமாவட்டம், சிறுகனூா் அருகிலுள்ள தச்சங்குறிச்சி வனப்பகுதிகளில் மகா சிவராத்திரியன்று பாரிவேட்டை என்ற பெயரில் முயலை வேட்டையாடுதல் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிலா் பாரிவேட்டைக்குச் சென்றுள்ளதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. மாவட்ட வன அலுவலா் சுஜாதா உத்தரவின்பேரில், வனத்துறையினா் அங்கு சென்று பாா்த்த போது பலா் முகாமிட்டிருந்தது தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து அங்கிருந்த 42 பேரையும், (இருவா் 18 வயது நிரம்பாத கல்லூரி மாணவா்கள் ), அவா்கள் அழைத்துச் சென்ற 18 நாய்கள், 4 மினி வேன்கள் ஆகியவற்றை மீட்டு மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா். அபராதம் விதிக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT