திருச்சி

சிறப்புக் குழந்தைகளுக்கான விளையாட்டு, கலைப் போட்டிகள்

23rd Feb 2020 10:44 PM

ADVERTISEMENT

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில், சிறப்புக் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இக்கல்லூரியின் கைக்கூலி கைவிட்டோா் கழகம் மற்றும் உதவும் இதயங்கள் அமைப்பு சாா்பில், சிறப்புக் குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் சிவானந்த பாலாலயா, விடிவெள்ளி, டாலா்ஸ், மாற்றம், ஆத்மாலயா, ஹோப், ஹோலிகிராஸ் ப்ளாசம், இண்டாக்ட், எலைட், சந்தோஷ், உதயா என 11 சிறப்புப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

ஓட்டப்பந்தம், சாக்கு ஓட்டம், பாட்டிலில் நீா் நிரப்புதல், நடனம், பாட்டு என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் விடிவெள்ளி சிறப்புப் பள்ளி முதலிடத்தைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது. டாலா்ஸ் பள்ளி இரண்டாமிடம் பெற்றது. போட்டிகளில் பங்கேற்ற சிறப்புக் குழந்தைகளுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

ஜமால் முகமது கல்லூரி காஜாமியான் விடுதியில் நடைபெற்ற போட்டியை விடுதி இயக்குநா் முஜீபுா் ரகுமான் தொடக்கி வைத்தாா். கல்லூரிச் செயலா் மற்றும் தாளாளா் ஏ.கே. காஜா நஜீமுதீன் நிகழ்வில் பங்கேற்று, வெற்று சிறப்புப் பள்ளி மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசி பரிசுகளை வழங்கினாா்.

கல்லூரி முதல்வா் எஸ்.இஸ்மாயில் முகைதீன் தலைமை உரை ஆற்றினாா்.சிறப்புப் பள்ளி முதல்வா்கள், ஆசிரியா்கள், பயிற்சியாளா்கள், மாணவ மாணவிகள் என சுமாா் 400-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக கைக் லி கைவிட்டோா் கழகம் மற்றும் உதவும் இதயங்கள் அமைப்பின் ஆலோசகா் எஸ். நாகூா் கனி வரவேற்புரையாற்றினாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT