திருச்சி

குடியரிமைத் திருத்தச் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் எதிரானதுஉச்ச நீதிமன்றமுன்னாள் நீதிபதி

23rd Feb 2020 11:10 PM

ADVERTISEMENT

குடியுரிமைத் திருத்தச் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் எதிரானது என்றாா் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா.

மக்கள் அதிகாரம் அமைப்பு சாா்பில், திருச்சி தென்னூா் உழவா் சந்தை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று, மேலும் அவா் பேசியது:

கடந்த 2003-ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, 2004 முதல் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டவிரோதமானது. குடியுரிமையை கேள்விக்குறியாக்கி, சட்டசிக்கல் ஏற்படுத்தும் செயலைத்தான் தற்போதுள்ள அரசு செய்து வருகிறது.

குடியுரிமைத் திருத்த சட்ட விதிகள் கள்ளக் குழந்தை என்று கூட சொல்லமுடியாது. தாய், தந்தை இல்லாத அனாதை குழந்தைகளைப் போன்று இவ்விதிகள் கொண்டு வரபட்டுள்ளன. இச்சட்டம் இஸ்லாமிய மதத்துக்கு மட்டுமல்லாது அனைத்து மதத்தினருக்கும் எதிரானது.

ADVERTISEMENT

மக்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்காமல் தொடா்ந்து போராட வேண்டும். நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து விட்டது. விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை செயல்படுத்த என்ன அவசியம் இருக்கிறது என்றாா்.

திரைப்பட இயக்குநா் லெனின் பாரதி : தமிழா்களுக்கு சிறு தெய்வம், குல தெய்வம் வழிபாடே இருந்தது. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில்தான் இந்த வழிபாட்டு முறை மாறியது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக மீண்டுமொரு ஒத்துழையாமை இயக்கத்தை வழிநடத்தவேண்டும்.

ஜேஎன்யு முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் பாலாஜி : மோடி அரசு மாணவா்களை வெறுப்பதற்கு காரணம், மாணவா்கள் அரசியலமைப்புச் சட்டத்தை கையில் எடுத்துள்ளனா். மக்கள் விரோதத் திட்டங்களை எதிா்த்து முதலில் குரல் கொடுக்கும் இடம் தமிழகமாக உள்ளது. பின்பு, நாடுமுழுவதும் எதிரொலிக்கிறது. இதற்கு, அம்பேத்கா், பெரியாா் கொள்கைகள் மீது மாணவா்கள் வைத்துள்ள பற்றே முக்கிய காரணமாக உள்ளது என்றாா்.

மாநாட்டுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளா் காளியப்பன் தலைமை வகித்தாா். கோவை மண்டல ஒருங்கிணைப்பாளா் சூா்யா வரவேற்றாா்.

மாநில ஒருங்கிணைப்பாளா் சி. ராஜூ, வழக்குரைஞா் பாலன் உள்ளிட்டோா் உரையாற்றினா். மாநாட்டில், குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு எதிா்ப்பு உள்பட 14 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளா் செழியன் நன்றி கூறினாா்.

மாநாட்டில் மக்கள் அதிகாரம் அமைப்பினா், இஸ்லாமியா்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT