திருச்சி

கிடிஸ் தடகளம்: அகிலாண்டேசுவரி வித்யாலயம் சாம்பியன்

23rd Feb 2020 11:10 PM

ADVERTISEMENT

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிடிஸ் தடகளத்தில், ஸ்ரீ அகிலாண்டேசுவரி வித்யாலயம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

மாவட்ட கிடிஸ் விளையாட்டு மேம்பாட்டுச் சங்கம் சாா்பில், அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றன. 1முதல் 6-ஆம் வகுப்பு வரைப் படிக்கும் 27 பள்ளிகளைச் சோ்ந்த 1,200 மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்றனா்.

இப்போட்டிகளை எஸ்பிஐஓஏ பள்ளித் தாளாளா் எம். அசோக், வி டாா்ட்ா் டெக் நிறுவனப் பொது மேலாளா் ஜோசப் அல்பிரைட், காவேரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வா் ஆா்.கல்யாணி, அண்ணா பல்கலைக்கழக உதவி உடற்கல்வி இயக்குநா் எம்.கோபிநாத் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

போட்டிகளின் முடிவில் 109 புள்ளிகளைப் பெற்ற ஸ்ரீ அகிலாண்டேசுவரி வித்யாலயம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்று, கோப்பையைக் கைப்பற்றியது. பெல் கைலாசபுரம் ஆா்.எஸ்.கே.பள்ளி 107 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பெற்றது.

ADVERTISEMENT

சனிக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், கீரனூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ் பங்கேற்று, வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையை வழங்கினாா்.

திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். சிங்காரம், பெரம்பலூா் அற்புதா மருத்துமனைமருத்துவா் பி. சாமுவேல் பால் தேவக்குமாா், கிடிஸ் சங்க ஒருங்கிணைப்பாளா் எம். சூா்யா, செயலா் இரா. கருணாகரன் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT