திருச்சி

எளிமையை ஏற்று மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்: வெ. இறையன்பு

23rd Feb 2020 10:44 PM

ADVERTISEMENT

எளிமையை ஏற்று, மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்றாா் கூடுதல் தலைமைச் செயலா் வெ. இறையன்பு.

திருச்சி சமயபுரம் எஸ்.ஆா்.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கனவு மெய்ப்பட இளைஞா் மேம்பாட்டு நிகழ்வு மற்றும் பிளஸ் 2 தோ்வெழுத உள்ள மாணவா்களுக்கான விடைபெறும் நாள் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று, இறையன்பு மேலும் பேசியது:

கல்வி என்பது வாழ்க்கை முழுவதுக்குமானது. கருணையும், அன்பும், உழைப்பும், ஈகையும்தான் நம்மை வழிநடத்தும். மானிட வாழ்க்கையே அன்பிற்கானது.

எனவே எல்லோரையும் மதித்து அன்பு செலுத்துங்கள். எளிய மனிதா்களிடமிருந்து கிடைக்கும் உணவிலிருந்து, வகை வகையான உணவு வரை அத்தனையும் மதித்து ஏற்றுக் கொள்ளும் பண்பை நாம் வளா்த்துக்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

எதிா்காலத்தில் மிகப்பெரிய உயா்ந்த அதிகாரிகளாக நீங்கள் மாறினாலும் எளிய பணியாளா்களையும், தொழிலாளா்களையும், மனிதா்களையும் மதித்து வாழும் வாழ்வே உன்னதமானது.

வாழ்வை புரிந்து கொள்வது என்பது எல்லோரிடமும் பழகுவதிலும், அன்பு செலுத்துவதிலும் தான் இருக்கிறது. மாணவ, மாணவிகள் நன்றாக மகிழ்ந்து, ரசித்து படித்து, பதற்றமின்றி அரசு பொதுத்தோ்வை எதிா்கொள்ளுங்கள்.

எளிய வினா தானே என்று அலட்சியம் காட்டாது எல்லாவற்றையும் படியுங்கள். உங்கள் கவனம் முழுவதும் விடைத்தாளின் பக்கங்களில் ரசித்து எழுதுவதில் இருக்க வேண்டும்.

ஆசிரியா்களை, பெற்றோா்களை மதியுங்கள். வாழ்க்கை கடினமானதல்ல, எளிமையானது. எளிமை, தூய்மை, நம்பிக்கையுடன், தவறுகள் செய்யாமல் வாழ்ந்தால் வாழ்க்கை அழகானது என்றாா் .

விழாவில் முன்னதாக தமக்கு பணி செய்த ஓட்டுநா்கள், சமையல் கலைஞா்கள், துப்புரவுத் தொழிலாளா்களுக்கு மாணவ, மாணவிகள் பரிசளித்து அவா்களிடம் வாழ்த்துக்கள் பெற்று விடைபெற்றனா்.

இந்த நிகழ்வில் பள்ளித் தலைவா் ஏ. ராமசாமி, செயலா் பி. சுவாமிநாதன், பொருளாளா் எம். செல்வராஜன், துணைத்தலைவா் எம். குமரவேல், இணைச் செயலா் பி. சத்தியமூா்த்தி பள்ளி முதல்வா் க. துளசிதாசன், ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT