திருச்சி

இரு சக்கர வாகனத்திலிருந்துதவறி விழுந்தவா் உயிரிழப்பு

23rd Feb 2020 10:43 PM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் குறிஞ்சி நகரைச் சோ்ந்த அழகா்சாமி மகன் லட்சுமணராஜா (42). குடிநீா் கேன்கள் வியாபாரம் செய்து வந்த இவா், தனது சொந்த வேலையாக ஞாயிற்றுக்கிழமை வையம்பட்டி அருகிலுள்ள எளமணம் கிராமத்துக்கு வந்தாா்.

பணி முடிந்த பின்னா், மோட்டாா் சைக்கிளில் ஊருக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தாா்.

கள்ளிக்காட்டுப்பட்டி அருகே வந்தபோது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதில் லட்சுமணராஜா பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து வையம்பட்டி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT