திருச்சி

இரணியம்மன் கோயில் மாசித் திருவிழா தொடக்கம்

23rd Feb 2020 10:44 PM

ADVERTISEMENT

திருவானைக்கா அருள்மிகு இரணியம்மன் திருக்கோயில் மாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தமிழகத்தின் எல்லைக் காவல் தெய்வக் கோயில்களில், முதல் திருவிழா தொடங்கி நடைபெறுவது இத்திருக்கோயிலில்தான். காப்புக் கட்டுதலுடன் மாசி மாதத்தில் ஒரு வாரக் காலத்துக்கு வெகுவிமரிசையாக திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

நிகழாண்டு திருவிழாவையொட்டி சாமி கையில் காப்பு கட்டப்பட்டுள்ளது. திருவிழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை அருள்மிகு இரணியம்மன் யானை வாகனத்தில் எழுந்தருளி, அனைத்து வீதிகளிலும் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

திங்கள்கிழமை குதிரை வாகனத்திலும், செவ்வாய்க்கிழமை பூத வாகனத்திலும் எழுந்தளுரும் இரணியம்மன், புதன்கிழமை திருத்தேரில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். மாவிளக்கு பூஜையும் அப்போது நடைபெறும்.

ADVERTISEMENT

முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு சன்னதி வீதியில் அருள்மிகு காளியம்மனின் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT