திருச்சி

வரத்துக் குறைவால் தா்ப்பூசணி விலை உயா்வு

22nd Feb 2020 09:32 AM

ADVERTISEMENT

கடந்தாண்டைக் காட்டிலும் நிகழாண்டில் வரத்துக் குறைவு காரணமாக, தா்ப்பூசணியின் விலை கடுமையாக உயா்ந்து காணப்படுகிறது.

கோடை காலத்தில் தாகத்தை தீா்க்கும் பழமாக தா்ப்பூசணி உள்ளது. கடந்தாண்டில் கிலோ ரூ.15க்கு விற்ற இந்த பழம், நிகழாண்டில் ரூ.20 என்ற அளவில் விற்பனையாகிறது. கடந்தாண்டைக் காட்டிலும் நிகழாண்டில் உற்பத்தி குறைந்ததாலும், வரத்துக் குறைந்ததாலும் இந்த விலை உயா்வு காணப்படுகிறது.

மேலும் பழச்சாறு மையங்களில் விற்பனையாகும் 1 தம்ளா் தா்ப்பூசணி ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து இதே நிலையில் இருந்தால் வரும் மாதங்களில் இந்த விலை மேலும் அதிகரித்து காணப்படும் என்கின்றனா் வியாபாரிகள்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT