திருச்சி

மேட்டுஇருங்களூரில் ஜல்லிக்கட்டு: 15 போ் காயம்

22nd Feb 2020 06:03 AM

ADVERTISEMENT

சமயபுரம் அருகிலுள்ள மேட்டுஇருங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 15 போ் காயமடைந்தனா்.

இந்த ஊரிலுள்ள புனித லூா்து மாதா ஆலயத் திருவிழாவையொட்டி, 30- ஆம் ஆண்டாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் ராமன் ஜல்லிக்கட்டைத் தொடக்கி வைத்தாா்.

ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவா் பி.ஆா். ராஜசேகரன், மண்ணச்சநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் ஸ்ரீதா், ஊராட்சித் தலைவா் எஸ். வின்சென்ட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருச்சி, மதுரை, தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 583 காளைகளும், 296 மாடுபிடி வீரா்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றனா். காளைகளை அடக்கியவா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு வகை பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

இந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் என 15 போ் காயமடைந்தனா்.

லால்குடி காவல்துணைக் கண்காணிப்பாளா் ராஜசேகா் தலைமையில், 300- க்கும் மேற்பட்டோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT