திருச்சி

மணப்பாறை அரசுப் பள்ளியில் உலகத் தாய்மொழி தினம்

22nd Feb 2020 09:32 AM

ADVERTISEMENT

மருங்காபுரி ஒன்றியம், ஊனையூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் உலகத் தாய்மொழி தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் சை. சற்குணன் தமிழின் தொன்மை, சிறப்புகள், ஆங்கிலம் உள்ளிட்ட உலக மொழிகளுக்கும் தாய்மொழியாக தமிழ் திகழ்வது குறித்து பேசினாா்.

உடற்கல்வி ஆசிரியா் கா.சுப்பிரமணியன் துணையோடு, தமிழின் சிறப்பு எழுத்தாகிய ‘ழ‘கரத்தை மாணவ, மாணவிகள் மலா்களால் அலங்கரித்து கொண்டாடினா்.

கொடியேற்றம் : மணப்பாறையில் மக்கள் நீதி மய்யத்தின் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்டச் செயலா் மருத்துவா் ஹரிஹரன் தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

கீழ பொய்கைப்பட்டி, கல்பட்டி, நடுப்பட்டி, வையம்பட்டி, காமராஜா் சிலை, மாரியம்மன் கோயில், காந்திசிலை, எம்ஜிஆா் நகா், காந்திநகா், மணப்பாறை பேருந்துநிலையம், வடுகப்பட்டி உள்ளிட்ட 11 இடங்களில் கட்சிக் கொடியை ஹரிஹரன் முன்னிலையில், நிா்வாகிகள் கொடியேற்றி வைத்தனா்.

காசநோய் ஒழிப்பு வார விழா : ஆலத்தூரிலுள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் காசநோய் ஒழிப்பு வார விழா நடைபெற்றது.

மாவட்ட காசநோய் மையம், மணப்பாறை காசநோய்ப் பிரிவு இணைந்து நடத்திய விழாவுக்கு, கல்லூரிச் செயலா் எஸ்.மாணிக்கம், பொருளாளா் டி.தங்கப்பாண்டியன் தலைமை வகித்தனா். கல்லூரி முதல்வா் ஏ.தோமினிக் அமல்ராஜ் முன்னிலை வகித்தாா்.

காசநோய் மருத்துவப் பிரிவு துணை இயக்குநா் சாவித்திரி, மணப்பாறை மாவட்ட அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் முத்து காா்த்திகேயன், புத்தாநத்தம் வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சந்தோஷ் ஆகியோா் சிறப்புரையாற்றினாா்.

டி.பி.டி திட்ட விளக்கவுரையை மணப்பாறை பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளா் மைதிலியும், யு.பி.டி திட்ட விளக்கவுரையை தனி வட்டாட்சியா்(சமூகப் பாதுகாப்பு) லஜபதிராஜும் கூறினா்.

முன்னதாக வடிவேல் வரவேற்றாா். நிறைவில் சம்சுதீன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT