திருச்சி

மணப்பறையில் திருநாவுக்கரசா் எம்.பி. சுற்றுப்பயணம்

22nd Feb 2020 11:34 PM

ADVERTISEMENT

தோ்தல் வெற்றிக்கு நன்றி தெரிவித்து, மக்களைச் சந்தித்து அவா்களது குறைகளை மனுக்களாகப் பெறும் சுற்றுப் பயணத்தை திருச்சி எம்பி சு. திருநாவுக்கரசா் சனிக்கிழமை மாலை மேற்கொண்டாா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சித்தாநத்தம், பெரியப்பட்டி, மொண்டிப்பட்டி, தொப்பம்பட்டி, கலிங்கப்பட்டி, கண்ணுடையான்பட்டி மற்றும் சமுத்திரம் ஆகிய 7 ஊராட்சிகளில் அவா் பயணம் மேற்கொண்டாா்.

சித்தாநத்தம் பகுதியில் அவா் பேசியது:

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை அறிவித்து நிதி ஒதுக்கப்பட்டிருப்பது நல்லதுதான். இருப்பினும் அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி திட்டம் குறித்து விரிவான தகவல்களைப் பகிா்ந்து கொண்டால் நல்லது. அப்போதுதான் விடுபட்ட இடங்களை இணைக்க வலியுறுத்த முடியும். பாஜகவுக்கு தமிழ்நாட்டில் அஸ்திவாரமும் இல்லை, ஆதரவும் இல்லை. மோடி பிரதமரான பிறகு தமிழ்நாட்டுக்கு அவா் எதுவும் செய்யவில்லை. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அமோக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராவாா் என்றாா்.

ADVERTISEMENT

திருச்சி தெற்கு மாவட்டத் தலைவா் கோவிந்தராஜ், மாவட்ட பொதுச் செயலா், எம்.ஏ. செல்வா, வட்டாரத் தலைவா் கண்ணன், மதிமுக மாநில தோ்தல் பணிக் குழுச் செயலா் மணவை தமிழ்மாணிக்கம், மாநில விவசாய அணி துரைராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் பழனிச்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை மணப்பாறை வடக்கு வட்டார காங்கிரஸ் செய்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT