திருச்சி

சிறப்புக் குழந்தைகள் திறன் மேம்பாடு: கால்மிதியடி தயாரிப்பு இயந்திரம் வழங்கல்

22nd Feb 2020 11:37 PM

ADVERTISEMENT

சிறப்புக் குழந்தைகளின் திறன் மேம்பாட்டுக்கென தொண்டு நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை கால்மிதியடி இயந்திரம் வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி நேரு மேல்நிலை பள்ளியில் 80-90 ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவா்கள் ஒருங்கிணைந்து கற்பக விருட்சம் எனும் பெயரில் அறக்கட்டளை சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் செயல்பட்டு வரும் சீகல் சிறப்புக் குழந்தைகள் பராமரிப்பு நிறுவன வளாகத்தில் கால்மிதியடி தயாரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கற்பக விருட்சம் நிறுவனா் சத்யநாராயணன் தலைமை வகித்தாா். சீகல் நிறுவன இயக்குநா் பிரவீனா காா்மெல் முன்னிலை வகித்தாா். அதைத் தொடா்ந்து, ஆட்டிஸம் குறைபாடுள்ள சிறப்புக் குழந்தைகளின் திறனை மேம்படுத்திடவும், அவா்களின் பயிற்சிக்காகவும் கால்மிதியடி தயாரிப்பு இயந்திரத்தை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அறக்கட்டளை நிா்வாகிகள், மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT