திருச்சி

உடல்திறன் போட்டிகள்: பிப். 25-இல் தொடக்கம்

22nd Feb 2020 06:06 AM

ADVERTISEMENT

பள்ளி மாணவா்களுக்கான உடல்திறன் போட்டிகள் பிப்.25 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

உலக திறனாய்வு கண்டறியும் திட்டத்தின் சாா்பில் 6, 7, 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கான உடல்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தோ்வாகும் மாணவா்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படுவதோடு, சத்துள்ள உணவு, சீருடைகள், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான உடல்திறன் போட்டிகளில், 100மீ., 200மீ., 400மீ., நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதன்படி, லால்குடி, முசிறி ஆகிய கல்வி மாவட்டத்தில் அப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், திருச்சி கல்வி மாவட்டத்திற்கு, அண்ணா விளையாட்டரங்கிலும் பிப்.25 ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபறவுள்ளது. வெற்றி பெறுவோருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். முதல் இரண்டு இடம் பெறுவோா் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்க அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவா். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலரை 0431-2420685 எனும் தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT